Wednesday, March 07, 2012

நிலாவும் ஒரு கூண்டும்...

கூண்டோடு
காத்திருக்கிறாள் நிலா
ஒவ்வொருநாளும்
ஏதோ ஒரு பறவை
வாங்கி வருவேன்
கூட்டில் அடைத்து
வளர்க்கவென.

நித்தம் நித்தம்
ஆயிரம் காரணங்கள்
சுதந்திரம் பற்றியும்
காதல் பற்றியும்
விளங்காத அவளிடம்.

முத்தம் ஒன்று தருகிறேன்
நீயும் தாவென
நிலாவின் முகத்தில் சந்தோஷம்
சுதந்திரப் பறவைக்கு இணையாக
சுதந்திரமும் காதலும் புரியும்வரை
என் முத்தங்கள் அடைபடாமல்!!!
நிலாக்குட்டிக்கு இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.நிலாக்கிழவிக்கு 7 வயசாச்சு.குழப்படி குறை,வாய் காட்டாதே,நல்லாப் படி,சுகமா சந்தோஷமா இரு,உன்னை நீ நம்பு,துணிச்சலோடு வாழ்வில் முன்னேறு,உன் கையில்தான் உன் வாழ்வு!எல்லோரும் நிறைவான வாழ்த்துத் தந்தார்கள்.அதிரா அக்கா பரிசும் தந்திருக்கிறா நிலாக்குட்டிக்கு.வாழ்த்துச் சொன்ன எல்லோருக்கும் அன்போடு நன்றி சொல்றா நிலா கனடாவில இருந்து !

51 comments:

  1. நிலாக்குட்டிக்கு இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்

    Kanchana Radhakrishnan
    T V Radhakrishnan

    ReplyDelete
  2. வாவ்...இந்த வருஷம் நிலாக்குட்டிக்கு அதிஷ்டம் நிறைய வரப்போகுது.ஐயா அன்ரி உங்களின் வாழ்த்து முதலில் கிடைத்தது மிகுந்த சந்தோஷம்.உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் அவளின் வாழ்வைச் சிறக்கவைக்கும் !

    ReplyDelete
  3. நிலவுக்கு எமது வாழ்த்துகள் ஆயிரமாண்டுகள் நோயின்றி வள்ளுவம்போல

    வாழ்வாங்கு வாழ வானமாய் வாழ்த்துகிறேன் ....

    நிலாப் பெண்ணே தமிழானாக வீரத்துடன் உங்களின் எண்ணம் போல இலக்ககுகள் வென்று நீடு வாழ்க . வாழ விழைகிறேன்

    ReplyDelete
  4. வணக்கம் ஹேமா!"நிலா"வுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்!நீங்கள் சொன்ன அறிவுரையையே நானும் சொல்கிறேன்.இந்த வயதில் குழப்படி தவிர்க்க முடியாததே,எனினும்,குழப்படி நேரத்தில் குழப்படியும்,படிக்கும் நேரத்தில் அவதானமாகவும் இருக்க வேண்டும்!"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து"!

    ReplyDelete
  5. nilavukku kavithai
    katti pottathu-
    ennai!
    vaazhthukkal'

    ReplyDelete
  6. நிலாவிற்கு

    எங்களது வாழ்த்துக்கள்.

    உன் எண்ணம் போல் எல்லாம் அமையட்டும் அன்பு நிலா.

    ReplyDelete
  7. நிலாக்குட்டிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. என்றென்றும் மகிழ்ச்சி பொங்கட்டும் நிலாவின் முகத்திலும், வாழ்க்கையிலும்... பிறந்த நாள வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நிலாக்குட்டி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ சேவிக்கின்றேன்.

    ReplyDelete
  10. உண்மையில் சிறுவயதில் ஒவ்வொரு பறவையையும் வாங்கி வளர்க்க ஆசைதான் சிறுவர்களுக்கு புரியும் தருனத்தில் தான் சுதந்திரம் ,வெளிப்படுகின்றது அழகிய கவிதை நிலாவைப் போல.

    ReplyDelete
  11. நிலாக்குட்டியின் தலைமுடி கடன் வாங்கி நானும் ஒட்டிக்கொள்ளனும் என்ற ஆசை வருகின்றது .மீஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  12. நிலா என்றும் சந்தோஷமுடன், நல்ல ஆயுளுடன், குறைவற்ற கல்வியுடன், எதிலும் சிறந்து விளங்க என் இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. நிலாக்குட்டிக்கு இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!
    இன்றும்,என்றும் வளர் நிலவாக
    வாழ்க!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. குட்டி நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  15. முழு நிலவாய் என்றும் மகிழ்ந்து வாழ
    நிலாக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ நிலாவுக்கு அன்பு வாழ்த்துகள்..

    ReplyDelete
  17. ஸ்வீட் நிலா...ம்ம்ம்... அழகு நிலாக்குட்டிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நம்முடைய வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  19. என் அன்பு வாழ்த்துக்களையும் சேர்த்து விடுங்கள் அக்கா ..
    கவிதை செம சிறப்பு ..

    ReplyDelete
  20. ஹாய்! நிலா குட்டி எப்படிமா இருக்கே ...

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  22. நிலாக்குட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. நிலாக்குட்டிக்கு இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!பூங்கொத்தோடு!

    ReplyDelete
  24. தேனூறும் தேனிலா
    பூமணக்கும் பொன்னிலா

    என்றும் என்றென்றும்
    முழு நிலவாய் ஒளி வீசிட

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  25. நிலாவிற்கு வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  26. வாழிய பல்லாண்டு . தமிழ்த் தாயின் ஆசி பெற்று .

    ReplyDelete
  27. அழகிய நிலாவுக்கு
    அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பிறந்த பொன்னாடும்,
    பிறப்புரிமைத் தமிழீழத் தாய்நாடும்,
    நம்மவள்!- இவள்
    நம்மகள்! எனவே,
    போற்றிடப் புகழ்ந்திட,
    நீடு வாழி நீ!
    தமிழ்ப் பண்பாடு
    நினைப் பண்பாடப்,
    பல்லாண்டு! பல்லாண்டு! -நீ,
    பண்பாடு!

    ReplyDelete
  28. so cute...!!!

    இந்த பிறந்தநாளில் நிலாவை வாழ்த்த கிடைத்த சந்தர்ப்பத்துக்கு மகிழ்கிறேன் ஹேமா.

    வாழ்வின் எல்லா இன்பங்களும் குறைவில்லாமல் அவளுக்கு கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

    நிலாவுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. Raveendran Sabapathi07 March, 2012 21:43

    நிலாகுட்டிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    நேர கேட்க முடியாவிட்டாலும், இறைவனை வேண்டிக்கறேன்.

    ரவி

    ReplyDelete
  30. நிலாக்குட்டிக்கு இனிய அன்பான பிறந்தநாள் (Belated) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. என் மகளின் பெயரும் நிலா என்பதால் இரட்டை மகிழ்வுடன் குட்டி நிலாவை வாழ்த்துகிறேன். நீண்ட ஆயுளுடனும் நிறைவான மகிழ்வுடனும் எந்நாளும் வாழ என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. அன்பு மகளுக்கு! என் இதயபூர்வமான...வாழ்த்துகளுடன்....ஆசியும் என்றும் உண்டு
    ரொம்பக் குறும்புக்காரிபோல பார்த்தாலே தெரிகிறது எனனைப்போல..............

    ReplyDelete
  33. புன்னகைப்பூ நிலாக் குட்டிப் பெண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. ய்யா....என்னோட சுவீட்ரிக்கு ஒண்ணு கொடுக்க மறந்துவிட்டேனே..

    என்னோட அன்பானமுத்தங்கள பல....
    ஹேமா முறைக்காதே,,,
    நிலாவுக்கு நூறுவீதம் முத்தம் கொடுத்தேன் ம்ம்ம்ம....பரவாயில்லை
    அதில் ஒருவீதம் மட்டும்தான் நீங்கள எடுத்துக்கொளளுங்கள
    அந்த ஒருவீதத்திலும்கூட...இனிப்புநீர் உங்களுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல கண்ணு.....

    ReplyDelete
  35. நிலா செல்லத்துக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  36. அச்சச்சோ பிந்திப் போய்ச்சே!

    நிலாக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! என்றென்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!

    மாமாவுக்கு கேக் அனுப்புங்கோ நிலாக்குட்டி!

    ReplyDelete
  37. நிலாக்குட்டிக்கு கூடை நிறைய நிறைய வழியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அம்மாவுக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணா வளர்ந்தா எல்லாருக்குமே பிடிச்ச பொண்ணாயிடலாம். இல்லையா ஹேமா?

    ReplyDelete
  38. இனிய பிறந்தனாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. நிலாக்குட்டிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  40. நிலாக்குட்டிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் விருப்பம்போல இனிய வாழ்வு அமைந்து நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  41. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  42. மனம் நிறைந்த வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  43. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நிலாக்குட்டிக்கு.

    ReplyDelete
  44. அடடா எனக்கிது தெரியாமல் போச்சே...

    யோகா அண்ணன் சொல்லியிராவிட்டல் தெரிந்திருக்காது.

    “நிலா” அழகான பெயர்...

    என்றும் குதூகலத்தோடு... நோய் நொடியின்றி.. நீண்ட ஆயுளோடு நல்ல பெயரெடுத்து வாழ வாழ்த்துகிறேன்.

    அம்மா வாங்கித் தராவிட்டால் என்ன.. இதோ நான் தெருகிறேன். பிறந்த நாள் பரிசாக....பத்திரமா வளவுங்கோ..

    மகள் கியூட்டாக இருக்கிறா ஹேமா(அம்மாவைப் போலவோ?:))

    http://2.bp.blogspot.com/_85h0rx9KpUw/TAYVGDZBb4I/AAAAAAAACKE/wdo5NVxhRJg/s1600/012_Baby_Birds_DGN.jpg

    ReplyDelete
  45. என்னடா இது புதுக்குழப்பம்?நிலா கனடாவில,ஹேமா சுவிசிலையோ???

    ReplyDelete
  46. ***என்னடா இது புதுக்குழப்பம்?நிலா கனடாவில,ஹேமா சுவிசிலையோ???***

    நல்லாக் குழம்பிக்கொண்டே இருங்கோ.ஒரு பால்கோப்பி நிறையப் பால்விட்டு,நிறையச் சீனி போட்டு நேசனிட்ட வாங்கித் தந்தால் சொல்லுவன் !

    ReplyDelete
  47. நிலாக் குட்டிக்கு என்னோட இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள் அக்கா

    ReplyDelete
  48. நன்றி ஹேமா!குழப்பம் தீர்ந்தது.மருமகள் என்று சொல்லியிருக்கலாம்!தெரியாமல் நான் அதிராவுக்கு ..........என்று சொல்லி......................!பரவாயில்லை,எல்லாம் ஒன்றுதானே???

    ReplyDelete