Thursday, January 26, 2012

சாகச விரல்கள்...

விரல்களின் வேகத்தில்
சுண்டலின் விசையில்
நம்பிக்கைகள்
கைகள் சுழற்றும்
சோளிகளின் சாகசங்களை நம்பி.

முழங்கையை மடக்கி விரித்து
குலுக்கிப் போடும் சோளியில்
நிமிர்ந்தும் கவிழ்ந்தும்
கிடப்பதாகிறது கனவு வாழ்வு.

மீண்டும் மீண்டும்
உருளும் சோளிக்குள்
முழித்த பார்வைகளின்
முணுமுணுக்கும் வாக்குகள்
முத்தமிடும் முள்முடிகளாய்.

பணம் ஒரு சோளி
பாசம் ஒரு சோளி
குழந்தை ஒரு சோளி
பாய்ந்து புரண்டு
பன்னிரண்டு சோளி சொல்லும்
பகடைக்குள் திடுக்கிடுகிறது
எதிர்பார்ப்பு.

வீழ்பவன் மனிதன்
எழுபவன் வீரன்
இல்லாததும் இயலாததும்
ஏதுமில்லையென்றாலும்
எதையோ சொல்லிக்கொண்டு
சுழல்கிறது சோளி!!!

ஹேமா(சுவிஸ்)

53 comments:

  1. //முழங்கையை மடக்கி விரித்து
    குலுக்கிப் போடும் சோளியில்
    நிமிர்ந்தும் கவிழ்ந்தும்
    கிடப்பதாகிறது கனவு வாழ்வு//

    இந்தவரிகள் மிகவும் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  2. பணம் ஒரு சோளி
    பாசம் ஒரு சோளி
    குழந்தை ஒரு சோளி
    பாய்ந்து புரண்டு
    பன்னிரண்டு சோளி சொல்லும்
    பகடைக்குள் திடுக்கிடுகிறது
    எதிர்பார்ப்பு.//

    அருமையான உவமை
    அருமையான சொற்சிலம்பம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. \\வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    சொல்லிக்கொண்டே
    சுழல்கிறது சோளி!!!//

    நல்ல வரிகள் ஹேமா வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சோழி உருட்டல் போன்றே கவிதையும் .
    அருமை.

    ReplyDelete
  5. /முழங்கையை மடக்கி விரித்து
    குலுக்கிப் போடும் சோளியில்
    நிமிர்ந்தும் கவிழ்ந்தும்
    கிடப்பதாகிறது கனவு வாழ்வு./

    ரசித்த வரிகள் ஹேமா.

    அருமையான கவிதை.

    ReplyDelete
  6. சோளியை நம்பாமல் நம் நம்பிக்கையை நம்பலாம்.பன்னிரண்டு சோளிக்குள்ளும் ஒருவித எதிர்பார்ப்பு உண்மைதான்.

    ReplyDelete
  7. ஹேமா!எங்க ஊர்ப்பக்கமும் சோளி சுழற்றும் பழக்கம் உள்ளது.அதை விட ரோட்டோர கிளி ஜோசியமும்,சோளியப் பார்த்துட்டு போயா ங்கிற சொல்லும் மிக பிரபலம்:)

    ReplyDelete
  8. //பன்னிரண்டு சோளி சொல்லும்
    பகடைக்குள் திடுக்கிடுகிறது
    எதிர்பார்ப்பு.//

    ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு .
    அதை அவர்கள் உருட்டும் லாவகம் இருக்கே!!!!! எட்ட இருந்து பார்த்து ரசித்தேன் ஒருமுறை

    ReplyDelete
  9. சோளிகளைப் போல வார்த்தைகளைச் சுழற்றிப் போட்ட கவிதை அருமை. பகடைக்குள் திடுக்கிடுகிறது எதிர்பார்ப்பு... என்ன அருமையான வரிகள்! ரொம்பப் பிடிச்சிருந்தது ஹேமா! எல்.ஐ.சி. கட்டடத்தை அண்ணாந்து பார்க்கும் சிறுவனாய் தங்கள் கவித்திறனை வியக்கிறேன் நான்!

    ReplyDelete
  10. சோழியை எல்லோரும் ஒரு வித எதிர்பார்ப்புடன் பார்க்க, நீங்க பார்த்த விதம் எங்களுக்கு ஒரு அருமையான கவிதையை கொடுத்திருக்கிறது.

    அனைத்து வரிகளும் மிக அழகு ஹேமா !!

    ReplyDelete
  11. /வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    எதையோ சொல்லிக்கொண்டு
    சுழல்கிறது சோளி!!!//

    அருமை.. அசத்தல்.

    ReplyDelete
  12. பணம் ஒரு சோளி
    பாசம் ஒரு சோளி
    குழந்தை ஒரு சோளி
    பாய்ந்து புரண்டு
    பன்னிரண்டு சோளி சொல்லும்
    பகடைக்குள் திடுக்கிடுகிறது
    எதிர்பார்ப்பு./

    ஜோதிடத்திலும் பன்னிரன்டு கட்டங்கள் தாமே வாழ்வைத் தீர்மானிக்கின்றன்!

    ReplyDelete
  13. \\வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    சொல்லிக்கொண்டே
    சுழல்கிறது சோளி!!!/

    சுற்றும் பூமி சுழலும் வரை சோளியும் சுழல்கிறது ஓய்வின்றி
    சாகச விரல்களில்!..."!

    ReplyDelete
  14. அடா அடா உங்க சோளி பிடிச்சுயிருக்குங்க... வர வர கலக்குறேள் போங்க :)

    ReplyDelete
  15. வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    எதையோ சொல்லிக்கொண்டு
    சுழல்கிறது சோளி!!!


    அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  16. தங்களின் கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கிறது சகோதரி.
    சோளி குலுக்கி போட்டது போல வார்த்தைகள்
    சும்மா சுத்தி சுத்தி விளையாடுது கவிதையில்.

    ReplyDelete
  17. நிமிர்ந்தும் கவிழ்ந்தும்
    கிடப்பதாகிறது கனவு வாழ்வு.//

    பன்னிரண்டு சோளி சொல்லும்
    பகடைக்குள் திடுக்கிடுகிறது
    எதிர்பார்ப்பு//

    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்//

    ந‌ல்லாயிருக்கு ஹேமா க‌விதையின் வீச்சு!

    ReplyDelete
  18. நல்ல வரிகள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. சோளிகள் சொல்லும் வார்த்தைகளைவிட
    உங்கள்
    கவிதை சொல்லும்
    அழகே வசீகரிக்கிறது.

    வாழ்த்துக்கள்!......

    ReplyDelete
  20. வித்தியாச சிந்தனை...அற்புத வரிகள் ஹேமா..

    ReplyDelete
  21. வார்த்தைச் சோழிகளை
    உருட்டியிருக்கிறீர்கள்.
    கவிதையும்,கனவுமாய்
    புரண்டு,புரண்டு
    விழுகிறது.

    ReplyDelete
  22. சோளி பார்க்கும் கைரேகைச் சாத்திரமும் ஏதோ ஒரு நம்பிக்கை சிலருக்கு சொல்வோருக்கு பிழைப்பு வார்த்தைகள் எப்படித்தான் கோர்க்கின்றீர்களோ கவிதையாக சிறப்பான கவிதை தோழி.

    ReplyDelete
  23. ஜோசியத்தை நம்புவதை விட அது சொல்லும் தத்துவத்தை அறிவது உத்தமம் என்பதைச் சொல்லும் கடைசி வரிகள் பிரமாதம். சோளியா ...சோழியா எது சரி?

    ReplyDelete
  24. சோளியும் சில விஷயங்களை கற்று கொடுத்துவிடுகிறதே. நல்ல கவிதை.

    ReplyDelete
  25. வணக்கம் அக்கா,
    வாழ்க்கையே ஒரு சோழி விளையாட்டாக ஆகி விட்டது என்பதனைச் சாகச விரல்கள் கவிதை மீட்டியிருக்கிறது.

    ReplyDelete
  26. //வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    எதையோ சொல்லிக்கொண்டு
    சுழல்கிறது சோளி!//

    அருமை,ஹேமா.

    ReplyDelete
  27. நல்லாருந்துதுங்க அக்கா...

    ReplyDelete
  28. //பகடைக்குள் திடுக்கிடுகிறது
    எதிர்பார்ப்பு.//

    படிக்கும் போதும் திடுக்கிடுகிறது மனசு ஹேமா..

    ReplyDelete
  29. அக்கா வணக்கம் ...
    கவிதை நெஞ்சுக்குள் அப்படியே ஒட்டிகிச்சு ..

    ReplyDelete
  30. வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    எதையோ சொல்லிக்கொண்டு
    சுழல்கிறது சோளி!!!
    அருமையான உவமை அழகு

    ReplyDelete
  31. சோலிகள் சொல்ல்லிச்செல்கிற கதைகள் எதுவாயினும் நம்மை கடிப்போட்டு விடுகிற அல்லது சாகசம் காட்டிச்செல்கிற செய்கை நம்மை நோக்கி கண்சிமிட்டுவதாக/

    ReplyDelete
  32. மிக சிறப்பான சிந்தனை கவிதை

    ReplyDelete
  33. //வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    எதையோ சொல்லிக்கொண்டு
    சுழல்கிறது சோளி!!!//

    வாழ்த்துகள் ஹேமா

    ReplyDelete
  34. //
    எதையோ சொல்லிக்கொண்டு
    சுழல்கிறது சோளி!!!//

    arumai akka ...
    intha varigalae pothum ..

    ReplyDelete
  35. எதிர்ப்பார்ப்பு இருக்கும் இடங்களெல்லாம் ஏமாற்றமே மிஞ்சும் ...

    ReplyDelete
  36. //வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லையென்றாலும்
    எதையோ சொல்லிக்கொண்டு
    சுழல்கிறது சோளி!!!//

    கவிதையின் கருவும் அதன் முழு
    உருவும் இவ் வரிகளில் உள்ளன!
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. //வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்//

    உண்மை!

    ReplyDelete
  38. இப்படித்தான் எல்லோரும் ஆனால் ரகசியமாய்
    தனக்கான சோளிகளை தனிமையில் குலுக்கிப் போட்டு
    குதுகளிக்கிரார்கள், திடுக்கிடுகிறார்கள்...
    நல்ல கவிதை.

    ReplyDelete
  39. அன்பு சகோதரி ...உங்களை புத்தாண்டு தீர்மானங்கள் ~ ஒரு மாத சுய பரிசீலனை... என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அன்போடு அழைக்கிறேன்...
    உங்கள் பதிவில் உங்களுக்கு நெருக்கமான மூவரை இதை தொடர அழையுங்கள்...

    ReplyDelete
  40. "வீழ்பவன் மனிதன்
    எழுபவன் வீரன்
    இல்லாததும் இயலாததும்
    ஏதுமில்லை"
    நன்றாகச்சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  41. சோளியின் வேகத்தில் சழலும் கவிதை பதிவுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. வார்த்தைகளும், எண்ணங்களும் சோளிகளாகி கவிதையை அலங்கரிக்கின்றன. வரிகள் அத்தனையிலும் சோளிகளுருட்டும் சாகச விரல்களின் லாவகம் மனங்கவர்கிறது ஹேமா...

    ReplyDelete
  43. வார்த்தைகளும் சோளிகளாய் சுழன்றிருக்கிறது..அருமை..

    ReplyDelete
  44. தன் கையை நம்பி உழைத்து பிழைத்தால் ஜோதிடத்துக்காக கூட அடுத்தவர் கையை நம்பியிருக்க தேவை இல்லையே

    ReplyDelete
  45. //மீண்டும் மீண்டும்
    உருளும் சோளிக்குள்
    முழித்த பார்வைகளின்
    முணுமுணுக்கும் வாக்குகள்
    முத்தமிடும் முள்முடிகளாய்.//மோனைகளின் சாம்ராஜ்யம் அருமை

    ReplyDelete
  46. ருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  47. அருமையான் விளக்கத்துடன் கவிதை

    ReplyDelete
  48. விருது காத்திருக்கும் பதிவின் முகவரி.
    .
    http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_3382.html

    .

    ReplyDelete
  49. சொலிக்கும் கவிதை... அருமை ஹேமா...

    ReplyDelete