Monday, March 07, 2011

மனோபாவம்...

என் குழந்தையைவிட
முட்டாளாகவும்
பிடிவாதக்காரியாகவும்
நகம் வளர்க்காத
பிசாசாகவும்கூட நான்.

அவளிடம்
தோற்றுப்போகாமல்
செய்வதெல்லாம்
சொல்வதெல்லாம்
சரியென்றே வாதாடுகிறேன்
நம்பவைக்கக் கூச்சலுமிடுகிறேன்.

விடுவதாயில்லை அவளும் !

உதைந்துவிட்ட புத்தகப்பை
"படிக்கும் புத்தகங்கள் சாமி
தொட்டுக் கும்பிடு."

"இல்லை அம்மா....
சாமியறைக்குள் மாத்திரமே
சாமி"என்கிறாள்!!!
நிலாக்குட்டியின் பிறந்தநாள் வாழ்த்தோடு...மகளிர் தினமும் !

ஹேமா(சுவிஸ்)

66 comments:

  1. உங்கள் மகளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கூடவே என் அன்பும்! :)

    ReplyDelete
  3. நிதரிசனமான உண்மை கொண்ட இனிய கவிதை.

    எனது வாழ்த்துக்கள் கவியரசி..

    ReplyDelete
  4. நிலாக்குட்டிக்கு வாழ்த்துகள். கவிதை வாசிக்கும் போது, என் குழந்தையின் ஞாபகம் வந்து விட்டது.

    ReplyDelete
  5. நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குட்டிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. உங்கள் செல்ல நிலா குட்டிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்டா செல்லம்.

    நீங்கள் சொல்வது கடவுள் தூனிலும் துரும்பிலும் என்று

    நிலா சொல்வது அந்த தூனும் துரும்பும் கடவுளின் கட்டளைப்படியென்று.

    நிலாவின் வாதமே சரி.

    ReplyDelete
  9. நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நிலாக் குட்டி Wish your Happy Birth Day Have a nice Day ...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் குட்டி ஹேமாவுக்கு :)

    ReplyDelete
  12. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஹேமா... நல்லா இருக்கு ‘நகம் வளர்க்காத பிசாசு’...:)

    ReplyDelete
  14. என் குழந்தையைவிட
    முட்டாளாகவும்
    பிடிவாதக்காரியாகவும்
    நகம் வளர்க்காத
    பிசாசாகவும்கூட நான்.//

    வணக்கம் சகோதரி, மேற் கூறிய வரிகளில் இறுதி வரியில் கொஞ்சம் இடை வெளி விட்டிருக்கலாம்.

    மழலைகளின் உலகம் அழகானது, அவர்களின் மொழி, அவர்களின் செயற்பாடுகள் இவை அனைத்தும் எம்மை ரசிக்க வைக்கும். அதிகம் படித்த மனிதர்களாலே சிந்திக்க முடியாத தர்க்க ரீதியான கேள்விகளை அவர்கள் கேட்பதும் ஒரு சில நேரங்களில் வியப்பினை ஏற்படுத்தும்.

    அதே போலத் தான் இந்தக் கவிதையில் வரும் நிலாக் குட்டியும், நீங்கள் பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்விகளை அள்ளி வீசுவதையும், எங்களின் பழக்கவழக்கமான, காலந் தோறும் படிக்கும் புத்தகங்களை தொட்டுக் கும்பிடும் பழக்கத்திற்கு உடன்பாடில்லாத அவளின் புதிய தொரு உலகம் நோக்கிய, மாற்றமிகு சிந்தனையும் வரவேற்கத்தக்கதே,

    வாழ்த்துக்கள் உங்களின் நிலாக் குட்டிக்கு.
    வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது ஆன்றோர் வாக்கு!
    அதற்கு உங்களின் நிலாக் குட்டியும் ஓர் சான்று!

    ReplyDelete
  15. இன்று மகளிர் தினம் ஆகையால் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நிலாக் குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    அன்பு உ(ள்ள)ங்களுக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ஹேமா உங்கள் மகளுக்கு எங்களின் வாழ்த்துக்களும்...

    நிலா என்பது உண்மையான பெயரா இருப்பின், இன்னும் கூடுதல் பாசத்துடன்.. :)

    ReplyDelete
  18. Convey our birthday wishes to her... she is so cute and smart! :-)

    ReplyDelete
  19. நிலா - வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. தாத்தாவின் முத்தங்கள்.

    ReplyDelete
  21. மகளுக்கு பிறந்த நாளா...எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சாமிக்கும் எல்லை வகுத்து விட்டாள் குழந்தை!

    ReplyDelete
  22. கடைசி மூன்று வரிகள்
    முத்தான வரிகள்

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பெண்மையை போற்றுவோம்...

    ReplyDelete
  24. ஹாய் ஹேமா... ஹேப்பி பர்த்டே டூ யுவர் டாட்டர்

    ReplyDelete
  25. குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. உங்கள் அம்முக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. நிலாக்குட்டிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. உங்கள் மகளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. சுடும் உண்மை.
    நீங்கள் சொன்னது என்னை சொன்னது போலிருந்தது.
    நிலாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. உங்கள் செல்லத்திற்கு
    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  31. இப்போவே இப்படியா???குட்டிக்கு வாழ்த்துகள்...சொல்லிடுங்க ஹேமா..

    ReplyDelete
  32. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    ReplyDelete
  33. நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. ஹேமுபாவம்.......
    என் அன்புக்குட்டிக்கு!
    என் அன்பான முத்தங்களுடன்....
    இறைவன் ஆசியும் வேண்டி...

    ReplyDelete
  35. நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க நிலாப்பெண்ணே...! மகளீர் தினமோடு உனக்கான புகழ் தினமாகவும் வரும் ஆண்டுகளின் மார்ச் -8 அமையட்டும்!!

    குழந்தைமை மிளிர்ந்து பிரகாசிக்கிறது... நிலாவின் முகத்திலும், கவிதை வரிகளிலும்....

    நம் குழந்தைகளே நமக்கான ஞான வாசல்களாய் பல நேரங்களில் ஜொலிக்கிறார்கள், இல்லையா தோழி...?

    ReplyDelete
  36. மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும்,
    உங்களுக்கு மகளிர்தின வாழ்த்துக்களும் ஹேமா!

    ReplyDelete
  37. குட்டி ஹேமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  38. நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  39. உங்களை நாங்கள் விடுவதாயில்லை ஹேமா..

    ReplyDelete
  40. அருமை ஹேமா.

    நிலாக்குட்டிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

    மகளிர் தின வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  41. நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

    ReplyDelete
  42. வார்த்தைகளற்ற கவிதை நிலா.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  43. நிலாக்குட்டிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  44. cute nila kku many more happy returns of the day........

    வாழ்க வளமுடன்.....

    ReplyDelete
  45. நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கூடவே என் அன்பும்! :)

    me too.
    Many more return of this Day.

    ReplyDelete
  46. Convey my Happy B'Day wishes 2 Nila -Hema.

    ReplyDelete
  47. வாவ்...வாவ்...செம ஹேம்ஸ்...அம்முகுட்டிக்கு பிறந்த நாளா....உங்க பொண்ணை இப்ப தான் பார்க்கிறேன் ஹேம்ஸ்...என் தாமதாமான வாழ்த்துகளை நிலாவிடம் சொல்லிடுங்க...:(

    ReplyDelete
  48. வருடம் ஒரு முறை மட்டுமே முகம் காட்டும் எங்கள் நிலா ...

    ReplyDelete
  49. எந்த எந்த இடத்தில் எதை எதைவைக்க வேண்டும்
    என இந்த வயதிலேயே ஞானம் பெற்ற செல்லக்குட்டிக்கு
    என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள் மிக அருமை.

    ReplyDelete
  51. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  52. அழகான கவிதை! குழந்தைக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  53. பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. மனோபாவமும்., விலகாத உறவும் அருமை ஹேமா.. ரொம்ப சிந்திக்க வைத்தது..

    ReplyDelete
  55. எங்கள் புதிய பதிவின் முதல் பதிவு - நம்ம பணம் திருட்டுப்போச்சு...

    ReplyDelete
  56. Hello Periyamma,

    Our Appamma is dead
    Thulasi

    ReplyDelete
  57. எல்லோருக்கும் நிலாக்குட்டியின் சார்பில் சந்தோஷமான நன்றிகள்.
    கனடாவில் இருந்தபடி கையசைத்துத் தன் சநதோஷத்தைத் தெரிவித்துக்கொள்கிறாள்.

    இப்போதுதான் தமிழ் மெல்ல மெல்ல அவள் அம்மாவிடம் படித்துக்கொள்கிறாள்.இன்னும் வாசிக்கத் தெரியவில்லை.வாசிக்கத் தொடங்கிய பின் அவளே பின்னூட்டமும் தருவாள்.

    அன்பு உறவுகளுக்கு என் நன்றியும்.உங்கள் அத்தனைபேரின் அன்பான வாழ்த்து அவளுக்கு இன்னும் ஆரோக்கியத்தையும் அறிவையும் பண்பையும் கொடுத்து அவள் வாழ்வில் இன்னும் அதீத சக்தியைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையோடு, ஜமால் சொன்னதுபோல வருடத்துக்கொருமுறை முகம் காட்டும் நிலவாக அடுத்த பிறந்த நாளில் முகம் காட்டுவாள்.இன்னும் கொஞ்சம் வாலும் ஆளும் வளர்ந்திருக்குமாம் அவளுக்கு அப்போ !

    ReplyDelete
  58. happy birthday Nila, sorry I am late

    ReplyDelete
  59. உங்கள் மகளா ஹேமா? பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்...குட்டிநிலா உங்களை குடைந்து எடுத்துவிடுவாள் போலிருக்கே...

    ReplyDelete
  60. அந்தப்பிள்ளையின் அறிவைக் கடிவாளங்கள் பிடியாமல் இருக்கட்டும். அப்படியே வளரட்டும்!

    ReplyDelete
  61. அருமையான அறிவுபூர்வமானக் கவிதை.... சிந்திக்க வைத்து.

    ReplyDelete
  62. எல்லாக்கவிதையும் இப்பதான் படிச்சிட்டு வந்தேன்.. நிலாக்குட்டிக்குயோ அல்லது குட்டி நிலாவோ என்னுடைய அன்பையும் சொல்லுங்கள் வாழ்த்துக்களும்கூட.

    குழந்தையின் சொல்லில் எப்போதுமே ஒளிந்திருக்கும் நிதர்சனம்..

    ReplyDelete
  63. ஓர் அம்மாவின் அன்பும், அவஸ்தையும். கவிதை, கவிதையாய் குழந்தை, அழகோ அழகு.

    ReplyDelete
  64. நிலா குட்டி அழகு

    ReplyDelete