Thursday, February 17, 2011

பொம்மை தேசம்...

ஓதிக் கட்டப்பட கயிற்றோடு
யானையின் முடியும்
சாத்தானின் சாபமும்
விஷத் தேளின் ஊர்ந்த எச்சமுமாய்
தோல் உரசிய காந்தலுடன்
முகம் தவறிய ஓர் நாளில்
பறந்துகொண்டிருந்தது
அந்தச் சர்ப்பம்.

சற்றுக் கண்மூடி மௌனித்த
அல்லது சைனித்த பொழுதில்
புணரியாய் திரண்ட கலம்
குறிச்சுவட்டில்
பாதை பிரித்து வகுத்த கோட்டுக்குள்
புத்தனாய் புத்திமானாய்
ஒரு சாடை.

நூதனமான ஒரு போதனையும்
அதன் ஏற்பாடுகளும் நிரம்பியிருந்தாலும்
தெளியவோ ஆராயவோ
திராணியற்ற ஒரு பொழுதில்
விடிகின்ற
காலையாய் அது!!!

ஹேமா(சுவிஸ்)

47 comments:

  1. Oh... I am the first..!

    Very Nice thought, well expressed..

    ReplyDelete
  2. கவிதை அருமை..
    புது புது வார்த்தைகள் பயன்படுத்தட்டிருப்பது..
    கவிதைக்கு பலம்
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. கவிதை நல்லாருக்கு ஹேமா.

    ReplyDelete
  4. >>>>சற்றுக் கண்மூடி மௌனித்த
    அல்லது சைனித்த பொழுதில்
    புணரியாய் திரண்ட கலம்
    குறிச்சுவட்டில்
    பாதை பிரித்து வகுத்த கோட்டுக்குள்
    புத்தனாய் புத்திமானாய்
    ஒரு சாடை.

    சாரி ஹேமா, இந்த லைன்ஸ் எனக்கு புரியலை

    ReplyDelete
  5. கவிதையில இலக்கியச் சுவை கொட்டுது! சொற்களில் அடர்த்தியும் வியக்க வைக்கிறது!!

    ReplyDelete
  6. // >>>>சற்றுக் கண்மூடி மௌனித்த
    அல்லது சைனித்த பொழுதில்
    புணரியாய் திரண்ட கலம்
    குறிச்சுவட்டில்
    பாதை பிரித்து வகுத்த கோட்டுக்குள்
    புத்தனாய் புத்திமானாய்
    ஒரு சாடை.// மரபுக்கும் புதுக்கவிதைக்கும் இடைப்பட்ட சராசரிகள் அறிந்து கொள்ள வியலாத விடயம் நல்ல ஆக்கம் அனால் ஒன்று இந்த குமுகம் மறுதலிப்பதை எங்கனம் ஏற்க்கவியலும்? போலித்தனம் என்றும் வீழும் என்பது உலக நியதி

    ReplyDelete
  7. உங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்றென சொல்லிக் கொள்ளலாம்.

    எவ்வளவு செய்நேர்த்தி!எத்துணை ஆழம்!

    வாழ்த்துகள் ஹேமா!

    ReplyDelete
  8. வார்த்தைகள் அருவியாய் தடுமாற்றமின்றி வருகிறது... புதிய புதிய வார்த்தைகளை சுமந்தபடி ஒரு அழகிய கவிதை.

    ReplyDelete
  9. கவிதை நல்லாருக்கு.

    ReplyDelete
  10. கவிதைக்கு விளக்கம் தேவை கிடைக்குமா

    ReplyDelete
  11. பொம்மைத்தேசம்.... அதுதான் உண்மை....

    ReplyDelete
  12. Sathyama puriyalenga..

    (Engala ethum thittureengala? Payammarukku )

    ReplyDelete
  13. ஹேமா நான் வரலை இந்த வீரவிளையாட்டு நமக்கு இதை புரிந்து கொள்ள ஞானம் போதாது..

    ReplyDelete
  14. அஹ‌ம‌து இர்ஷாத்17 February, 2011 14:18

    ஆக‌ச் சிற‌ந்த‌ வ‌ரிக‌ள் ஹேமா..

    ReplyDelete
  15. வணக்கம்!

    சகோ நலமா?

    நேசன் அருமையாச் சொல்லி பஸ்ஸிலும் பகிர்ந்துவிட்டார் :))

    ReplyDelete
  16. என்னிடம் கெஞ்ஞிக்கொள்ளும் வரிகள் உங்களிடம் கொஞ்ஞிக்கொண்டிருக்குது.

    ReplyDelete
  17. 5 தடவை படித்து புரிந்து கொண்டேன் .. ஆழமான கருத்து.
    கவிதை அருமை..

    ReplyDelete
  18. ஒண்...ணும்..புரியலை.

    ReplyDelete
  19. ஒண்ணுமே புரியலை !!!

    ReplyDelete
  20. கவிதை அருமை..
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. நன்றி நசரேயன்.

    ReplyDelete
  22. அருமையான இலக்கிய நயத்துடன் ஒரு கவிதை தந்ததற்கு, பாராட்டுக்கள்!

    ReplyDelete
  23. ஹேமா ! பலமுறைப் படித்து விட்டேன்.. கர்வமாய் இருக்கிறது

    ReplyDelete
  24. கவித்துவம்!!! கவிதைய ரசிக்க தெரிஞ்ச எனக்கு அத புரிஞ்சுக்க தெரியல ..

    ReplyDelete
  25. இந்தப் பிகாசோ கவிதைகளை ஒரு நாளாவது கண்டுபிடித்து விடுவேன் என்ற ஆர்வத்தாலே மீண்டும்!மீண்டும்...

    ReplyDelete
  26. ஹேமா,

    நசரேயன், ராஜ நடராஜன் ஆகியோரை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  27. ஹேமா ... சும்மா பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க ....

    பிறகு கவிதை வடிவுக்காக சர்ப்பத்தை பறக்க விட்டு இருக்கீங்களே ???!!!! எத்தனை பொருளாக கொண்டு அப்படி எழுதி இருக்கீங்க .... விளக்கம் தேவை

    ReplyDelete
  28. புரியலங்க ஹேமா..!!

    ReplyDelete
  29. முதல் பத்தியும், கடைசி பத்தியும் அட்டகாசம்..

    இரண்டாம் பத்தியில் வார்த்தைகளை இன்னும் கூர் தீட்டியிருக்க வேண்டும்..

    ReplyDelete
  30. தன்னை அறியா சூழலில்
    சுழலும் யுகத்தில்
    யாசிக்கும் போதனைகள் எல்லாம்
    நேசிக்க மறந்த பொம்மைகளே.

    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  31. ஏதோ மந்திர உச்சாடணம் போலயிருக்கு உங்கள் கவிதை...

    மிக பெரும் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டு பெருங்குரலால் கையுர்த்தி கர்ஜணை :)

    ReplyDelete
  32. வார்த்தைகளிலும் வடிவமைப்பிலும் இந்த கவிதை ஒரு தனிச் சிறப்போடு அமைந்திருக்கிறது...நினைவிலுள்ள தங்களின் கவிதைகளிலே, தனிப்பட்ட முறையில், எனக்கு மிக மிக மிக பிடித்த கவிதை இதுவே....வாழ்த்துக்கள் ஹேமா....

    ReplyDelete
  33. உங்கள் உரைநடையின் மொழி மிக நெருக்கமாக இருக்கிறது ஹேமா.

    மொழி இறுகும்போது யூகங்கள் பெருகுகிறது.

    யூகங்கள் பெருகுவது ஒரு படைப்புக்கு சேதத்தை உண்டுபண்ணுகிறது.

    எளிமையில்தான் உறைந்திருக்கிறது வலிமை.

    அடுத்த கவிதைக்குக் காத்திருக்கிறேன் ஹேமா ஒரு ரசிகனாய்.

    ReplyDelete
  34. [நூதனமான ஒரு போதனையும்
    அதன் ஏற்பாடுகளும் நிரம்பியிருந்தாலும்
    தெளியவோ ஆராயவோ
    திராணியற்ற ஒரு பொழுதில்
    விடிகின்ற
    காலையாய் அது!!!]]

    ம்ம்ம்ம்... அழகான வார்த்தைகளின் கோர்வை பாராட்டுகள் ஹேமா....

    ReplyDelete
  35. ஹேம்ஸ்...ரொம்ப இலக்கிய தமிழில் சில வார்த்தைகள் இருந்தது டா...எனக்கு தான் அதை புரிஞ்சுக்க கூடிய அறிவில்லன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  36. கவிதை அருமை..
    புது புது வார்த்தைகள் பயன்படுத்தட்டிருப்பது..
    கவிதைக்கு பலம்
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  37. மிக அருமையான வரிகள் அக்கா அழுத்தமாய் இருக்கிறது..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    ReplyDelete
  38. வித்தியாசமாய் சிந்திக்கிறீர்கள் வார்த்தைகள் எங்கிருந்து பிடிக்கிறீர்கள்.

    ReplyDelete
  39. மிகவும் அருமை ஹேமா..

    ReplyDelete
  40. புத்தனும் சாத்தானும்

    அருமை ஹேமா

    விஜய்

    ReplyDelete
  41. உண்மையச் சொன்னா எனக்கும் கொஞ்சம் புரியவில்லை

    ReplyDelete
  42. வணக்கம் நண்பர்களுக்கு.என் பதிவுகளின் இடைவெளி கூடிக்கொண்டே போகிறது.காரணங்கள் நிறையவே....எப்போதும்போல.மனம் அமைதியில்லை.சரி சரி !

    கவிதை நான் குழம்பியிருந்த சமயம் வந்து விழுந்த வார்த்தைகள்.
    நாடு,வீடு,நான் எல்லாமே இருக்கிறது இந்தக் கவிதைக்குள்.சரியாக அர்த்தம் என்னாலும் சொல்ல முடியாது.
    ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு அர்த்தமாகப் படுகிறது எனக்கே.
    அதனால அவங்க அவங்களுக்கு எப்பிடி எப்பிடி படுதோ அப்பிடியே இருக்கட்டும்.நடா சொன்னதுபோல பிக்காசோவாகவே இருக்கட்டும்.
    முக்கியமாக நேசன்மாதிரி புரிந்து பாராட்டியது சந்தோஷம்.
    எல்லோருக்குமே நன்றி நன்றி !

    சுந்தர்ஜி...உங்கள் அறிவுரைக்கு நன்றி.எனக்குத் தெரிந்திருந்தாலும் ஒரு சின்ன இடைச் செருகள்.
    எப்பவும் இப்படி இருக்காது !

    ReplyDelete