Wednesday, January 13, 2010

பொங்கலாய்க் காதல்...


என் கவிதைத் தொகுப்பு.
புரட்டிய கண்களில் ஏமாற்றம்.
எங்கும் இல்லை உன் பெயர்.
என்னடா....
அத்தனை எழுத்துக்களிலுமே நீதானே !

ஆசைகள் வற்றிய குளத்தில்
கல்லெறிந்துவிட்டு
அமைதியாய்
இன்னொரு குளம் தேடுகிறாய்.
வருவாயா மீண்டுமொருமுறை
காயம் செய்ய !

வெறுசாய்க் கிடந்த
காகிதத்தில் மை ஊற்றியவன் நீ
அர்த்தங்களைச் சேகரித்தவள் நான்
உன் விலாசம் மட்டும்
இல்லை அதில் !
தூரங்கள் தொலைவாயிருந்தும்
எதையும் துவாரமிடவில்லை
யாரையும் துளைக்கவுமில்லை களவெடுத்தோம்.
வேண்டதவளாய் ஆனபிறகு
பங்கைத் கொடுத்துவிடு
காட்டிக் கொடுக்கமாட்டேன் !

வந்து...தந்த காதல்
போக நினைக்கிறது.
முளைத்த காதல்
மடிய மறுக்கிறது
முடியும் விடு
அடித்துக் கொல்வேன்
மறக்க மட்டும் மாட்டேன் !

மறக்க நினைக்கையில்தான்
உன் நினைவுகள்
இன்னும் இன்னும் நெருக்கமாய்
என்ன செய்ய நான் !

தொலைக்கப் பிடிக்கவில்லை.
தொலைந்துவிடு தயவு செய்து
சொல்லாமலே !!!

இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

அன்பின் பிரிவோடு ஹேமா(சுவிஸ்)

56 comments:

  1. இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பொங்கி வரும் வாழ்த்து!

    ReplyDelete
  3. எழுத்துக்கள் படிக்கச் சிரமமாய் இருந்தன. விடுவோமா என்ன?
    இன்றுதான் சீக்கிரம் வந்து பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்...
    தப்பர்த்தம் செய்து ஏமாந்தாளா கவிதை நாயகி?
    "அடித்துக் கொல்வேன்
    மறக்க மட்டும் மாட்டேன் "

    ஐயோ அழகான ராட்சசியா...

    "வருவாயா மீண்டுமொருமுறை
    காயம் செய்ய "

    "தொலைந்துவிடு தயவு செய்து
    சொல்லாமலே !!"

    அன்பின் முரண்?

    ReplyDelete
  4. கவிதையில் ஏனிந்த வருத்தம் இழையோடுகிறது...? அடிக்கடி காணாமல் போவதற்கு மன்னிக்கவும்.... தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.... தொங்களின் ஆதரவுக்கு நன்றியும்...... பொங்கல் வாழ்த்துக்களும்.....

    ReplyDelete
  5. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    என்னளவில் பொங்கலாய் காதலை விட காதலாய் பொங்கல்தான் உடனடி எதிர்பார்ப்பு

    :)

    ReplyDelete
  6. மறக்காத நினைவுகள் என்றும் மரிக்காது

    பொங்கல் வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  7. "தொலைந்துவிடு தயவு செய்து
    சொல்லாமலே !!"
    கோபமும் அழகாய்தான் வந்திருக்கிறது.

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  8. //இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.//

    ஹேமா,

    முந்தைய இடுகையின் படத்தை மறக்க... மறக்க நினைத்த கதை, இங்கு கவிதையாக...ம்ம்ம்.பிடிச்சிருக்கு.

    ஆனா,

    இன்னைக்கு தமிழர் தெரு நாள்.

    மகிழவோ, வாழ்த்தவோ மனமில்லை.
    மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. உழவர் திருநாளுக்கு இனிமையான பொங்கலாய்க் காதல். இனிக்க இனிக்க அழகான பரிசு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  10. படத்தைப்பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன் ஹேமா,போன கவிதைக்கு நீங்கள் போட்ட படத்தைப் பார்த்து மிரண்டு போன மனங்களுக்கு இம்முறை படங்கள் மருந்து. நன்றி****

    ReplyDelete
  11. வந்து...தந்த காதல்
    போக நினைக்கிறது.
    முளைத்த காதல்
    மடிய மறுக்கிறது
    முடியும் விடு
    அடித்துக் கொல்வேன்
    மறக்க மட்டும் மாட்டேன் !//

    பொங்கிப் பெருகும் கவிதை மழைக்குப் பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. சிவப்பு எழுத்தும் பின்னணியும் மாற்றினால் படிக்க எளிதாய் இருக்கும்!!

    ReplyDelete
  13. மறக்க நினைக்கையில்தான்
    உன் நினைவுகள்
    இன்னும் இன்னும் நெருக்கமாய்
    என்ன செய்ய நான்

    Very Nice

    ReplyDelete
  14. ஹேமா பலமுறை படித்தேன்
    கண்களில் கண்ணீர்தான்
    வழிகிறது காதல் எவ்வளவு கூர்மையான
    ஆயுதம்
    {நடந்தவைகளை} புரட்டும் போதும்,
    தோன்றும் போதும்,பார்க்கும் போதும்,
    படிக்கும் போதும்,நினைக்கும் போதும்
    பட்டுப் பட்டு குத்தக் குத்த
    இரணமாகிறது வாழ்க்கை.

    ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்படும்
    உணர்சிகள் அப்பப்பா.......
    இதை அனுபவித்திருந்தால்!!!
    அனுபவரீதியாய் வெளிப்பட்டிருந்தால்!!!
    சொல்ல முடியாத வேதனை.

    சோகமான வரியும்,வலியும்

    தங்கமே!! என் அன்புடன் அரவணைப்பும்
    சேர்ந்து ஆசையுடன் உச்சிமோர்ந்து
    பாசமுடன் சொல்கிறேன்
    பிறக்கட்டும் தை முதல்நாள்
    உனக்குத் திருநாளாய்!!

    ReplyDelete
  15. வழக்கம் போல் அருமை

    ReplyDelete
  16. நல்லாயிருக்கு ... பொங்கல் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  17. இனிய பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  18. மனதில் பொங்கிய காதல் அருமை..

    ReplyDelete
  19. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு,வாழ்த்துகள் .கவிதையில் ஏனிந்த வருத்தம் .

    ReplyDelete
  20. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //பொங்கலாய் காதல்// அழகான தலைப்பு!

    //தொலைக்கப் பிடிக்கவில்லை
    தொலைந்து விடு தயவுசெய்து
    சொல்லாமலே!!!//
    சொல்லாமல் சென்று விட்டால் என்ன ஆயிற்றோ? ஏன்? எதற்கு? என்று ஆயிரம் எண்ணங்களுடன் மனம் துடித்து, துடித்து ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகி உயிரோடு கொல்லும். சொல்லி சென்று விட்டால், இணைந்து இருந்த இனிமையான தருணங்களை மனதில் சுமந்தபடி, இனி இதான் என்று மனதில் நிறுத்தி வாழ முயற்சிக்கலாம், இல்லையா?

    ReplyDelete
  22. மிஸ்..மிஸ்...

    பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா...!

    ReplyDelete
  23. மறக்க நினைக்கையில்தான்
    உன் நினைவுகள்
    இன்னும் இன்னும் நெருக்கமாய்
    என்ன செய்ய நான் ! ...............அருமையான வரிகள்.....

    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. இப்போதைக்கு புத்தாண்டு வாழ்த்து.,ஆனா கண்டிப்பா கும்மி அடிக்க வருவேன்

    ReplyDelete
  25. பொங்கலாய் பொங்கட்டும் காதல்... என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. Wishing you a Happy Pongal Hema.Pongalaai Kaathal,very nice.

    ReplyDelete
  27. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  28. இனிய பொங்கல் வாழ்த்த்துக்கள்.

    ReplyDelete
  29. அவசரத்தில் கவிதையை மேலோட்டமாக வாசித்தேன். அதுதான் கவிதை பற்றி சொல்லாமல் பொங்கல் வாழ்த்துக்களை மட்டும் சொன்னேன். பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஒருவர் என்னோடு பேசும்போது உங்கள் இந்தக் கவிதை பற்றிப் பேசினார்.

    உடனே திரும்பவும் வந்து ஆழமாக வாசித்தேன். என்ன அருமையான வரிகள். மிகவும் பிடித்த வரிகள். பல தடவை வாசித்தேன். என்னுள்ளே அத்தனை வரிகளும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  30. காதல் - கவி பொங்குகிறது.

    ----------

    நசர் சொல்லிட்டு வாங்க :)

    ReplyDelete
  31. பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா

    ReplyDelete
  32. எங்க வீட்ல பொங்கல் பொங்கிருச்சு உங்க கவிதை போல...

    பொங்கலோ பொங்கல்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. ஹேமா ....பொங்கல் வாழ்த்துக்கள்

    (கொஞ்சம் கோவம் எனக்கு போன கவிதைக்கு நான் போட்ட பின்னூட்டத்திற்கு நீங்க இன்னும் பதில் பின்னூட்டம் போடல)

    ReplyDelete
  34. //தேவன் மாயம் said...

    சிவப்பு எழுத்தும் பின்னணியும் மாற்றினால் படிக்க எளிதாய் இருக்கும்!!//


    அட ஆமங்க ஹேமா

    ReplyDelete
  35. பொங்கல் தின வாழ்த்துகள் ஹேமா... இனி வரும் காலம் தமிழன் தமிழனாக இருக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  36. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு / பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. ம்ஹும்....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. காதல் நினைவுகளைச்
    சில்லறையாய்ச் சேர்க்கிறாள்
    உங்கள் நாயகி.
    தாக்கும்
    தேங்கும் வரிகள்.

    ReplyDelete
  40. தமிழுக்குத்
    தமிழின்
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஹேமா!
    எல்லா நலமும் பெற்று வாழ்க என்றும் வளமுடன்!

    ReplyDelete
  42. சூரிய கிரகணத்தில் மூழ்கிய ஒரு பகற்பொழுதில் பூமியில் விழும் ஒரு அபூர்வ நிழலைப் போல
    காதல் மறைக்கப்படுகிறது சில நேரங்களில்.
    ஆனால் எப்போதும் காதல் தொலைவதில்லை. தோற்பதுமில்லை.

    பெயர் தெரியாத பூவொன்றில் நொடிநேரம் அமர்ந்தெழுந்த ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகசைத்துப் பறக்கிறது. தன் கால்நுனிகளில் ஒட்டிக் கொண்ட அந்தப் பூவின் மகரந்தத்தோடு. சில உணர்வுகளின் பரிவர்த்தனைக்கு நொடிநேரமே அதிகம்தான். காதலில், விலகல் என்பது எப்போதும் சாத்தியமற்ற உணர்வு.

    இருந்த காதலை விட இழந்த காதலைத்தான் அதிகம் நேசிக்க முடிகிறது.

    காதல் துயரத்திற்கு ஆறுதல் தேவையில்லை. காதலைவிட அதன் பிரிவு மிக உணர்ச்சிகரமானது. அதை உணர வாய்த்தவர்கள் கொடுத்து ​வைத்தவர்கள்.. அதிர்ஷ்டசாலிகள்!

    காதில் இருந்தாலும் கண்ணாடியில்லாமல் பார்த்துக் கொள்ளமுடியாத காதணி போல.. இந்த காதல். உணர்தலில் மட்டும் தன் இருப்பை ஞாபகப்படுத்தும். பேச, எழுத முடியாது போனாலும் எப்போதும் தன் இருப்பை உணர்த்துவதில் காதல் ஒரு வன்முறைவாதி. இந்த இனிய வன்முறைக்கு ஆட்பட்டு அதிர்ந்து கொள்கிற ஒரு பூவாய் இருக்கிறது கவிதை.

    பொங்கலும்... பொங்கல் வாழ்த்துகளுமாய்.

    ReplyDelete
  43. சூப்பர். ரசித்தேன் ஹேமா...
    //வெறுசாய்க் கிடந்த
    காகிதத்தில் மை ஊற்றியவன் நீ
    அர்த்தங்களைச் சேகரித்தவள் நான்//
    மிகவும் ரசித்தேன்...
    பொங்கல் வாழ்த்துக்கள்னு இங்க ஃபார்மலாச் சொல்ல முடியலை...

    ReplyDelete
  44. இதயத்தை களவாடி வரும் காதல் காணமல் போனால் களவாடப்பட்ட இதயத்திற்கு வலிக்கும் விந்தை தான் காதல்....

    கவிதையில் வலியிருப்பதால் வலிக்கிறது..இருப்பினும் கவிதை இனிக்கிறது ஹேமா......

    ReplyDelete
  45. மிக வலியோடு இருக்கிறது....பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  46. ஆசைகள் வற்றிய குளத்தில்
    கல்லெறிந்துவிட்டு
    அமைதியாய்
    இன்னொரு குளம் தேடுகிறாய்.
    வருவாயா மீண்டுமொருமுறை
    காயம் செய்ய !

    அற்புதமான வரிகள். உங்கள் கவிதா விலாசத்துக்கு இதுவும் ஒரு சான்று. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள்
    தமிழ்மணம் விருதுக்கு..::))

    ReplyDelete
  48. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,

    சிங்கக்குட்டி.

    ReplyDelete
  49. //மறக்க நினைக்கையில்தான்
    உன் நினைவுகள்
    இன்னும் இன்னும் நெருக்கமாய்
    என்ன செய்ய நான் !//

    காதல் இனிக்கும் கவிதை! அருமையான வரிகள்! காலம் கடந்த பொங்கல் வாழ்த்துக்கள் நட்பே!

    ReplyDelete
  50. //மறக்க நினைக்கையில்தான்
    உன் நினைவுகள்
    இன்னும் இன்னும் நெருக்கமாய்
    என்ன செய்ய நான் !//

    காதல் இனிக்கும் கவிதை! அருமையான வரிகள்! காலம் கடந்த பொங்கல் வாழ்த்துக்கள் நட்பே!

    ReplyDelete
  51. வாழ்த்துகள் ஹேமா .

    ReplyDelete
  52. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. //அடித்துக் கொல்வேன்
    மறக்க மட்டும் மாட்டேன் //

    அட்டகாசம் ஹேமா அழகான ராட்சசி ஆயிட்டீங்க ...நல்லா இருக்குப்பா

    ReplyDelete
  54. வணக்கம் நான் நவநீதன் தங்களுடையா அனைத்து கவிதைகளும் நன்றாக உள்ளது நீங்கள் ஒரு website தொடங்கி அதில் வெளியிடலமே


    விருப்பம் இருத்தல் எனக்கு Mail பன்னுக my mail offical id mnksystam@gmail.com
    என்னுடய Website www.mnksystems.com
    பாருங்க விருப்பம் இருந்தல் mail பன்னுங்க
    என் இனைய தலம் தவிரா வேரு ஒருவருக்கு
    நான் முதல் முறையாக Create பன்ன விரும்புகீறன் என் முதல் முயற்சி நிறைவேற நீங்கள் உதவ வேன்டும் full website free ka

    ReplyDelete
  55. //மறக்க நினைக்கையில்தான்
    உன் நினைவுகள்
    இன்னும் இன்னும் நெருக்கமாய்
    என்ன செய்ய நான் !//
    எல்லோருக்குமே இந்த பிரச்சனை இருக்கும்போல..

    ReplyDelete