Tuesday, March 17, 2009

முத்தம்...

எதிர் பார்த்துக்
காத்துக் கிடக்கிறேன்
உன் வரவுக்காக...
வீடு முழுதும் பரவும்
உன் வாசத்திற்காக...

மீண்டும்...
வழி அனுப்பும்போது
கிடைக்கும் உன்
சுவாசம் கலந்த
சூடான உன்
முத்தத்திற்காகவே !!!

ஹேமா(சுவிஸ்)

100 comments:

  1. //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    Vaare Wow.... Super....

    ReplyDelete
  2. Super....
    இது ஜமால் அண்ணாவின் ஸ்டைல், நான்கு வரியில் ஒரு நச் கவிதை.

    உறுதி, குறைந்தது 300 கும்மியடி

    ReplyDelete
  3. மாதவ் க்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.

    ReplyDelete
  4. //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    இதுக்காகவே அவரு அடிக்கடி வெளியூர் போகணுமே.:-))

    ReplyDelete
  5. அருமையான கவிதை தோழி.. காதலின் ஏக்கம்.. காத்திருப்பின் தீவிரம்.. நச்சென்று உள்ளது..

    ReplyDelete
  6. //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    ஆஹா அருமை..

    ReplyDelete
  7. //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    படம்:- பசலை படருது என்றால் இதுதானா?

    ReplyDelete
  8. மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!
    //

    எப்படா போவாருன்னு காத்திருப்பீங்களா?
    இஃகி! இஃகி!! இஃகி!!

    ReplyDelete
  9. கவிதை மிச்சம் தொடர்ந்து எழுதுக !!!

    ReplyDelete
  10. முத்தம் எனக்கு மிகப்பிடித்தமான விசயம்....

    ReplyDelete
  11. காதலில் முத்தம் என்பதை எப்படிச்சொன்னாலும் அழகுதான் இல்லையா...

    ReplyDelete
  12. //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    அருமை ...!!!

    காப்பிரைட்ஸ் ஏதேனும் இருக்கா??

    எனென்றால் இதே கவிதையை குழந்தைப்பேற்றிற்காக ஊருக்கு போயிருக்கும் என் மனைவிக்கும் அனுப்பிவிட்டேன் :))

    நன்றி..

    அன்புடன்
    காரணம் ஆயிரம்

    ReplyDelete
  13. நல்லா இருக்கு. இது ஏற்கனவே உங்க தளத்துல படிச்சுட்டேனே..இது பிரமையா...?!

    தமிழ்ப்பறவை

    ReplyDelete
  14. ஏன் இந்த இறைவனுக்கு ஓரவஞ்சனை ???
    பின்ன என்ன ஹேமா,
    நீங்க மட்டும் எதபத்தி எழுதினாலும் அழகா இருக்கு.

    ReplyDelete
  15. //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    //

    ஒரு வேளை.. கட்டை வண்டியிலே வாராரோ

    //
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...
    //

    வாசனை திரவியமா?

    ReplyDelete
  16. //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    ஏன் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு போனா கிடைக்காதா?

    ReplyDelete
  17. chanceya illai ....
    sema super aa irukku....
    ippo than oru english kadhal kavithai book padithu vittu vanthal ingeyum kadhal kavithaiya....

    kalam ellam kadhal valga......

    ReplyDelete
  18. ஆஹா காத்திருப்பு அதுவும் முத்தத்திற்கு என்றால் சும்மாவா? சூப்பர் அக்கா!!

    ReplyDelete
  19. அச்சோ....தமிழ்ப்பறவை அண்ணா.இதுவும் பிரம்மையா...!சுகமா அண்ணா?

    ReplyDelete
  20. கார்த்திகைப் பாண்டியன் காதல்ன்னாலே "நச்"தானே.

    ReplyDelete
  21. // தேவா...
    மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!
    //

    எப்படா போவாருன்னு காத்திருப்பீங்களா?
    இஃகி! இஃகி!! இஃகி!!//

    அப்புறம் எப்படா வருவார்ன்னும்தான்..

    ReplyDelete
  22. // (இரவீ ) said...
    ஏன் இந்த இறைவனுக்கு ஓரவஞ்சனை ???
    பின்ன என்ன ஹேமா,
    நீங்க மட்டும் எதபத்தி எழுதினாலும் அழகா இருக்கு.//

    இரவீ,என்னை நக்கல் பண்றீங்களா...புகழ்றீங்களா..!

    ReplyDelete
  23. தமிழன் ,முத்தம்....ம்ம்ம்....சொல்ற நேரமே ஒரு சுகமும்-அழகும்தான்.

    ReplyDelete
  24. எங்கே ஜமால்,இராகவன்.

    ReplyDelete
  25. நசரேயன் ...
    //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    ஏன் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு போனா கிடைக்காதா?77

    பாருங்க பாருங்க நசரேயன்.ரொம்ப கொடுமை இது.

    ReplyDelete
  26. காதலை வாழ்த்தும் மேவிக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. //கலை - இராகலை said...
    ஆஹா காத்திருப்பு அதுவும் முத்தத்திற்கு என்றால் சும்மாவா? சூப்பர் அக்கா!!//

    கலை அனுபவமோ...!
    கமலுக்கும் கவினுக்கும் கோவம் வரப்போகுது.

    ReplyDelete
  28. :) நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...////****
    எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ அழகா எளிதா சொல்லிருக்கீங்க ..அதான் ஹேமாவதி

    ReplyDelete
  30. pls tell me... i think that this one i had seen already in your blog... in one of ur posts, u put ur poem in slides with one sweet song(sung by thiyagu i think)...

    ReplyDelete
  31. கலக்கல்...

    எப்படியோ, வந்தாலும் சரி போனாலும் சரி, காதல் கலந்து இருக்கும்னு சொல்றீங்க...

    நல்லா இருக்குங்க சகோதரி!!! சும்மா நச்'னு!!

    ReplyDelete
  32. வாங்க காரணம் ஆயிரம்(வாரணம் ஆயிரம் மாதிரியோ)அதுக்கிடைல சுட்டு சுடச் சுட உங்க காதலுக்கு அனுப்பிடீங்களா !இதுதான் காதலின் வேகம்.சந்தோஷ்மான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. முதல் வருகைக்கு நன்றி ரங்கன்.
    இனியும் வாங்க.

    ReplyDelete
  34. நிலா அம்மா...காதலே அழகு.அதோடு முத்தமும் சேர்கிறது இங்கு.இன்னும் அழகுதானே !

    ஹேமவதி.

    ReplyDelete
  35. தமிழ்ப்பறவை அண்ணா உங்க ஞாபகத்துக்கு ஒரு சபாஷ்.பாட்டு ஒண்ணும் சேர்க்கல.நான் ஒரு வருடதிற்கு முன் Photo shop பழகிப் பார்த்தேன் இந்தக் கவிதையை இணைத்து.அதுதான் இது.(சில பழைய பதிவுகள் சில சமயம் மீள்பதிவும் இடுகிறேன்.)

    ReplyDelete
  36. ஆதவா,நச் ன்னு கருத்தும் சின்னதா.என்ன வேலை அலுப்பா?

    ReplyDelete
  37. முத்தம் - நினைத்தாலே இனிக்கும்

    ReplyDelete
  38. // எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன் //

    காத்து கிடத்தலும் ஒரு சுகம் தாங்க..

    ReplyDelete
  39. // உன் வரவுக்காக...
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    அனுபவிச்சு எழுது இருக்கீங்க..

    வைரமுத்து வரிகளில் சொன்னது மாதிரி...

    சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா..

    ReplyDelete
  40. // மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    அதற்காகவே அடிக்கடி வழி அனுப்புவதாக நம்ம தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

    ReplyDelete
  41. // சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    முத்தம் மட்டும் தான் சூடு...

    அதன் நினைவுகள் தென்றல் போல் குளுமை...

    ReplyDelete
  42. // RAD MADHAV said...

    Super....
    இது ஜமால் அண்ணாவின் ஸ்டைல், நான்கு வரியில் ஒரு நச் கவிதை.

    உறுதி, குறைந்தது 300 கும்மியடி//

    ஆம் .. இது ஜமால் ஸ்டைல்தான்..

    யாரவது இருக்கீயளா.. கும்மி அடிக்கலாம்

    ReplyDelete
  43. // thevanmayam said...

    //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    படம்:- பசலை படருது என்றால் இதுதானா?//

    ஆமாம் பசலை இப்படித்தான் இருக்குமா?

    ReplyDelete
  44. // thevanmayam said...

    கவிதை மிச்சம் தொடர்ந்து எழுதுக !!!//

    ஆமாம் நானும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றேன்.

    ReplyDelete
  45. // Ravee (இரவீ ) said...

    ஏன் இந்த இறைவனுக்கு ஓரவஞ்சனை ???
    பின்ன என்ன ஹேமா,
    நீங்க மட்டும் எதபத்தி எழுதினாலும் அழகா இருக்கு.//

    ஆமாங்க இரவி... எனக்கும் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்குங்க..

    இரண்டு வரி எழுத வரமாட்டேங்குது.. இவங்க என்னடா என்றால் வரிசையா கவிதை போட்டு கலக்குறாங்க...

    ReplyDelete
  46. // நசரேயன் said...

    //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    //

    ஒரு வேளை.. கட்டை வண்டியிலே வாராரோ

    //
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...
    //

    வாசனை திரவியமா?//

    கலக்குரீங்க தளபதி...

    ReplyDelete
  47. // நசரேயன் said...

    //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    ஏன் நீங்க பொட்டிய கட்டிக்கிட்டு போனா கிடைக்காதா?//

    இதற்கு முந்தைய என்னுடைய பின்னூட்டத்தையே இதற்கு கன்னா பின்னாவென்று ரிப்பீட்டிக்கிறேன்.

    ReplyDelete
  48. Hi kuzhanthainila,

    Congrats!

    Your story titled 'முத்தம்... ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th March 2009 08:25:01 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/41735

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  49. ஹேமாஆஆஆஆஆஆஆஆ

    அடுத்த முறை எனக்கு தெரியாமல் பதிவு போட்டால்

    உங்கள் வலை ஹேக் செய்யப்படும்

    ReplyDelete
  50. என்ன இதெல்லாம்

    நான் இல்லாம 50 தாண்டியாச்சா

    ரொம்ப சந்தோஷமா எல்லோருக்கும்

    ReplyDelete
  51. முத்தம் ...

    அதுவும் சத்தமில்லாம!

    ReplyDelete
  52. காத்திருக்கிறேன் நீ விட்டுச்சென்ற சுவாசத்தையே சுவாசித்துகொண்டு

    இன்னும் உன் வாசத்திற்காக

    ReplyDelete
  53. உன் முத்தத்தின் நேசத்திலேயே

    நான் சுவாசிக்க தொடங்கினேன்

    ஆக்ஸிஜன் குறைவா இருக்கு!

    சீக்கிரம் வாயேன்!

    ReplyDelete
  54. அடிக்கடி வெளில போயிட்டு வரச்சொல்லுங்கோ

    ReplyDelete
  55. படம் அழகு ...

    பல சொல்கின்றன ...

    ReplyDelete
  56. ஜமால் எங்கே போனீங்க?நீங்க இல்லாம வெறிச்சோடிக் கிடக்கே குழந்தைநிலா.

    ReplyDelete
  57. //நட்புடன் ஜமால் ...
    ஹேமாஆஆஆஆஆஆஆஆ

    அடுத்த முறை எனக்கு தெரியாமல் பதிவு போட்டால்

    உங்கள் வலை ஹேக் செய்யப்படும்//

    எப்பவும் உடனே ஓடி வருவீங்க.
    இண்ணைக்கு என்ன ஆச்சு !

    ReplyDelete
  58. ஜமால்,ஒண்ணு கவனிச்சீங்களா?எல்லாருமே உங்களை இங்க நினைச்சுக்கிட்டுத்தான் பின்னூட்டம் போட்டிருக்காங்க.

    உங்க பேர் 2-3 இடத்தில வருது பாருங்க.இராகவனுக்கும் ,மாதவ் க்கும்தான் ரொம்பச் சந்தோஷம்.

    ReplyDelete
  59. \\ஹேமா said...

    ஜமால்,ஒண்ணு கவனிச்சீங்களா?எல்லாருமே உங்களை இங்க நினைச்சுக்கிட்டுத்தான் பின்னூட்டம் போட்டிருக்காங்க.

    உங்க பேர் 2-3 இடத்தில வருது பாருங்க.இராகவனுக்கும் ,மாதவ் க்கும்தான் ரொம்பச் சந்தோஷம்.\\

    ஆமாங்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு

    ReplyDelete
  60. \\எப்பவும் உடனே ஓடி வருவீங்க.
    இண்ணைக்கு என்ன ஆச்சு !\\

    நான் படுக்கும் முன் என் நெட் படுத்துதே ...

    ReplyDelete
  61. \\முத்தம் மட்டும் தான் சூடு...

    அதன் நினைவுகள் தென்றல் போல் குளுமை...\\

    அண்ணா நீங்களும் முயன்றிடுங்கள்

    ஓராயிரம் பின்னூட்டறோம்

    ReplyDelete
  62. Soodana kavithai,soodana muththam pola.

    ReplyDelete
  63. //வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    ரொம்ப அழகான எதிர் பார்ப்பு ஹேமா...

    ReplyDelete
  64. //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    சுவாசம் கலந்த முத்தம்...?...எவ்வளவு அழகான சொல்லாடல்...கவிதை சின்னதா மிக அழகா இருக்கு ஹேமா...

    ReplyDelete
  65. ஹேமா,பொன்னாத்தா-ல நீங்கள் கேட்ட ஒரு விஷயம் சுட சுட தயார்

    ReplyDelete
  66. ஹேமா said...

    //கலை - இராகலை said...
    ஆஹா காத்திருப்பு அதுவும் முத்தத்திற்கு என்றால் சும்மாவா? சூப்பர் அக்கா!!//

    // கலை அனுபவமோ...!
    கமலுக்கும் கவினுக்கும் கோவம் வரப்போகுது.//

    ஐயோ.. அனுபவமா? அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல. அட நம்புங்க! இப்ப கோப படமாட்டாங்க கமலும் கவினும் இல்லையா?

    ReplyDelete
  67. எதிர்பார்ப்பு, காத்துகிடப்பு, வாசம், சுவாசம், சூடான முத்தம்,
    கலக்கல் ஹேமா :-))

    ReplyDelete
  68. //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//


    வழி அனுப்புவது கூட அடுத்த வரவேற்புக்காகத்தானே???

    ReplyDelete
  69. நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
    படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
    வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
    http://sureshstories.blogspot.com/

    ReplyDelete
  70. //எதிர் பார்த்துக்
    காத்துக் கிடக்கிறேன்
    உன் வரவுக்காக...
    வீடு முழுதும் பரவும்
    உன் வாசத்திற்காக...//

    ஹேமா சான்ஸே இல்லை!!!

    திரும்பத் திரும்ப படிக்கிறேன்...
    காதல் கொட்டிக் கிடக்கிறது கவிதையில்:)

    ReplyDelete
  71. காதல்லாம் என்னக்கு தெரியாதுப்பா...

    ReplyDelete
  72. intha blog download aga time taking...wy???

    ReplyDelete
  73. ஹேமா said...

    ஆதவா,நச் ன்னு கருத்தும் சின்னதா.என்ன வேலை அலுப்பா?

    இந்த இரண்டு நாட்கள் வேலை... பாருங்க இப்ப இந்திய நேரம் கிட்டத்தட்ட இரவு 12.00 இப்போதான் பார்க்க முடிஞ்சது!!!

    ReplyDelete
  74. நன்றி முனியப்பன்.உங்கள்
    "உன் புன்னகை"யை விடவா !

    ReplyDelete
  75. நன்றி புதியவன்.நீங்களும் இந்தக் கவிதைக்குப் பிந்திட்டீங்க.முத்தம் பற்றி உங்களுக்குத் தெரியாத கவிதையா !

    ReplyDelete
  76. //கலை...ஐயோ.. அனுபவமா? அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல. அட நம்புங்க! இப்ப கோப படமாட்டாங்க கமலும் கவினும் இல்லையா?//

    கவினும் கமலும் இன்னும் உங்க பின்னூட்டத்தைக் கவனிக்கலையோ இன்னும்.ஆதவா எங்கே?

    ReplyDelete
  77. வாசவன்,எங்கே ரொம்ப நாளாக் காணோம் இந்தப் பக்கம்.இப்போ முத்தச் சத்தம் கேட்டிச்சோ !

    ReplyDelete
  78. ஆனந்த்,இப்போ எல்லாம் பின்னூட்டம் தராம 50-75 அடிக்கிறீங்க.

    ReplyDelete
  79. //ஹேமா சான்ஸே இல்லை!!!

    திரும்பத் திரும்ப படிக்கிறேன்...
    காதல் கொட்டிக் கிடக்கிறது கவிதையில்//

    பூர்ணி,அள்ளிக்கிட்டு போய்டாதீங்க.திரும்பவும் வாங்க.

    ReplyDelete
  80. //கவின் ...
    காதல்லாம் என்னக்கு தெரியாதுப்பா...//

    கவின் சொன்னது சரிதான்.காதல்லாம் தெரியாது.காதல் தெரியும்.ஆருக்கு கதை அளக்கிறீங்கள்.

    எங்க எங்கட கமல்.இந்தியாவுக்குப் பறந்திட்டாரோ !அவர் எண்டா ஒத்துக்கொள்ளுவார் தெரியும் எண்டு.

    ReplyDelete
  81. //MayVee said...
    intha blog download aga time taking...wy???//

    மேவி,ரொம்பப் பேர் சொல்லியிருக்காங்க.குழந்தைநிலா திருத்த வேலை விரைவில் நடக்கும்.

    ReplyDelete
  82. //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!
    //

    நன்றாக உள்ளது

    ReplyDelete
  83. ஹேமா, அனுக்கமானவரின் பிரிவை உணர்த்தும் ‘முத்தம்‘ கவிதை அருமை. ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. வண்ணமயமான உங்கள் வலைப்பக்கம் ஒரு பூங்காவில் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது. உங்கள் குழந்தை ரொம்ப அழகு. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  84. //மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே !!!//

    என்னவோ பண்ணுது போங்க. உடம்பு
    சிலிர்க்கும் ஓர் உணர்வு

    ReplyDelete
  85. நிஜமாவே நல்லாருக்கு! புகைப்படத்தில் வளைந்து நெளிந்திருக்கும் வார்த்தை போலவே படிக்கும்போது மனம் வளைந்தாடுகிறது.


    நல்ல கவி ஹேமா!

    ReplyDelete
  86. மீண்டும்...
    வழி அனுப்பும்போது
    கிடைக்கும் உன்
    சுவாசம் கலந்த
    சூடான உன்
    முத்தத்திற்காகவே//


    ஆஹா.....என்ன வலைப்பதிவிலை எல்லாம் தூது அனுப்பல் தொடருதோ???

    ம்...நடக்கட்டும்..நடக்கட்டும்......

    ReplyDelete
  87. யக்கோ?? அனுப்பின தூதுக்குப் பதில் வந்ததா???

    ReplyDelete
  88. மேவி முத்தம் 100 அடிச்சிட்டீங்க.
    குழந்தை நிலா பாவம்.விட்டிடுங்க.
    இங்க கும்மி வேணாம்.உப்புமடச் சந்தி சமாளிச்சிடும் உங்க கும்மியை.வாங்க.

    ReplyDelete